நடிகர் தனுசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடரப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
Published on

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கவும், மேலூர் கோர்ட்டில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு தனுஷ் மனு செய்தார்.

மனு மீதான விசாரணையின்போது தனுஷ் ஆஜரானார். அபோது மருத்துவக்குழுவினர் அவருடைய அங்க அடையாளங்களை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து மேலூர் கோர்ட்டில் கதிரேசன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில் தனுஷ் தனது பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து தாக்கல் செய்து ஐகோர்ட்டை ஏமாற்றியதாக கூறி கதிரேசன் மதுரை கோ.புதூர் போலீசிலும், கமி‌ஷனரிடமும் மனு தாக்கல் செய்தார்.

இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவர் ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார்.


அதில் ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த தனுஷ் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு பட்டியலிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என்பதற்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com