பதான்கோட் அருகே ராணுவ சீருடைகளுடன் மர்ம பை கண்டெடுப்பு - உஷார் நிலையில் பாதுகாப்பு படைகள்

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படைகள் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பதான்கோட் அருகே ராணுவ சீருடைகளுடன் மர்ம பை கண்டெடுப்பு - உஷார் நிலையில் பாதுகாப்பு படைகள்
Published on

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படைகள் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் உள்ள ராணுவதளம் அருகே நேற்று மாலை மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில் ராணுவ சீருடைகள் இருந்துள்ளன. இதனால், மொத்த நகரும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில போலீசார்
தீவிர கண்கானிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இதே போல் மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது, அதில் செல்போன் டவர்களுக்கு பொருத்தப்படும்
பேட்டரி இருந்தது. அப்போதும், இதேபோல நகரெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்நகரில் உள்ள விமானப்படை தளத்திற்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 7 வீரர்களை சுட்டுக்கொன்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com