முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர்

போரூர் அருகே முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

போரூர்:

வடபழனி, ஈஸ்வரி நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். பிளம்பராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி யோகலட்சுமி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 3மாத கைக்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சிவகுமாருக்கு ஏற்கனவே லதா என்கிற பெண்ணுடன் வடபழனி கோவிலில் முதல் திருமணம் நடந்திருப்பது யோகலட்சுமிக்கு தற்போது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த யோகலட்சுமி, இதுபற்றி சிவகுமாரிடம் கேட்டார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக சிவகுமார் மீது யோகலட்சுமி வடபழனி மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்கு பதிவு செய்து சிவகுமாரை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com