ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா, கேரளா இடையேயான போட்டி டிராவில் முடிந்தது

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி 2-2 என சமனில் முடிந்தது. #HeroISL #KeralaBlastersFC #AtheleticodeKolkata
ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா, கேரளா இடையேயான போட்டி டிராவில் முடிந்தது
Published on

கொல்கத்தா:

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடம் கேரளாவின் குட்ஜோன் பல்ட்வின்சன் கோல் அடித்தார். அதன்பின் 38-வது நிமிடம் கொல்கத்தா அணியின் ரியான் டெய்லர் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமனானது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தி 55-வது நிமிடம் கேரளா அணியின் டிமிடர் பெர்பாடோவ் கோல் அடித்தார்.  அதைத்தொடர்ந்து 75-வது நிமிடம் கொல்கத்தாவின் டாம் தோர்பே கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோல் அடிக்காததால் இன்றைய ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

கேரளா அணி 22 புள்ளிகளுடன் தொடர்ந்து ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து எட்டாவது இடத்தில் நீடிக்கிறது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் எப்.சி. கோவா - பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #KeralaBlastersFC #AtheleticodeKolkata #LetsFootball #KOLKER

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com