

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று பெங்களூருவில் 8 மணிக்கு தொடங்கிய 86-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 89-வது நிமிடம் வரையிலும் கோல் அடிக்கப்படாததால் ஆட்டம் டிராவாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 90-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 90-வது நிமிடத்திலேயே பெங்களூருவின் உடாண்டா சிங் அடுத்த கோல் அடித்தார். கேரளா அனியினர் இறுதிவரை கோல் அடிக்கவில்லை. இதனால் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.