லாலுபிரசாத்துடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு

ரா‌‌ஷ்டிரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் சந்தித்து பேசினார்.
லாலுபிரசாத்துடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு
லாலுபிரசாத்துடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு
Published on

ராஞ்சி:

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ரா‌‌ஷ்டிரீய ஜனதாதளம் கட்சி தலைவருமான லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜார்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அங்கு லாலுபிரசாத் யாதவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் சந்தித்து பேசினார். பின்னர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பிறந்த நாளையொட்டி ஆசி பெறுவதற்காக லாலுபிரசாத்தை சந்தித்தேன். விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தினேன். அப்போது அவர், மகா கூட்டணியில் தொடர வேண்டும் என்றும், அப்போது தான் ஓட்டுகள் சிதறாமல் ரகுபர்தாஸ் (பா.ஜனதா) அரசை தோற்கடிக்க முடியும் என்றும் கூறினார்’’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com