மராட்டியம், ஆந்திராவில் மீண்டும் கனமழை

ஆந்திரா, மராட்டிய மாநிலத்தில் மீண்டும் கனமழை செய்து வருகிறது. கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை (கோப்புப்படம்)
மழை (கோப்புப்படம்)
Published on

அமராவதி:

ஆந்திரா, மராட்டிய மாநிலத்தில் மீண்டும் கனமழை செய்து வருகிறது.

ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகள் முழு கொள்ளளவை எட்டி திறக்கப்பட்டன. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 19 கிராமங்களும், கிழக்கு மாவட்டத்தில் 16 கிராமங்களும் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கிராமங்களில் வசித்த 150 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். கோதாவரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கோதாவரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது பல்வேறு அணைகளில் இருந்து நீர்வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதால் பிராசிக் மாவட்டத்தில் கோதாவரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாசிக்கில் உள்ள கங்காபூர், தர்ணா அணைகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இந்த அணைகளில் இருந்து நீரை வெளியேற்ற வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. சாங்கிலி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணா மற்றும் வரணா நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com