

சென்னையில் கடும் வெப்பம் வாட்டி எடுக்கும் நிலையில் இன்று அனல்காற்று வேகமாக வீசியது.
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 2 நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
இன்று 108 டிகிரி வெயில் அடித்தது. இதனால் சாலைகளில் நெருப்பை அள்ளிப்போட்டது போல வெப்பம் காணப்பட்டது. கடுமையான அனல் காற்று வீசியது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
பகலில் வெளியில் நடமாடியவர்கள் வியர்வை மழையில் நனைந்தனர். இதனால் வழக்கத்துக்கு மாறாக தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-