

பாட்னா:
தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு இதுவரை 56 பேர் பலியாகி உள்ளனர். இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கயா மாவட்டத்தில் 19 பேரும், நவாடா மாவட்டத்தில் 7 பேரும் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.