தான்சானியா: கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 18 பேர் பலி

தான்சானியா நாட்டில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரி மற்றும் வேன்
விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரி மற்றும் வேன்
Published on

நைரோபி:

தான்சானியா கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நாடாக திகழும் நைஜீரியாவில் சாலைகள் உள்பட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மோசமான சாலைகள், அதிக பாரம் ஏற்றுதல், அதிவேகம் போன்ற காரணங்களால் அங்கு பல்வேறு விபத்துக்கள் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் டார் எஸ் சலாம் நகரில் உள்ள சாலையில் 30-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. 

முஹுரன்கா பகுதியில் உள்ள ஹிலிமஹீவா கிராமம் அருகே வேன் சென்ற போது சாலையின் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com