ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவன் கொல்லப்பட்டான் - அரசு அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு தலைமை வகித்த அபு சாட் எர்ஹாபி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. #Afganistan #ISHeadKilled
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவன் கொல்லப்பட்டான் -  அரசு அறிவிப்பு
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

அதன்படி, ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டான். மேலும், 10 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. #Afganistan #ISHeadKilled

X

Maalai Malar
www.maalaimalar.com