இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல்: கொல்கத்தா ஐகோர்ட்டில் மா.கம்யூனிஸ்ட் மனு தள்ளுபடி

மேற்கு வங்காளம் மாநில பஞ்சாயத்து தேர்தலில் இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி மா.கம்யூனிஸ்ட் சார்பில் தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல்: கொல்கத்தா ஐகோர்ட்டில் மா.கம்யூனிஸ்ட் மனு தள்ளுபடி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான அவகாசத்தை நீட்டித்த தேர்தல் ஆணையம், மீண்டும் அந்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாயத்து தேர்தலுக்கு புதிய தேதியுடன் கூடிய அறிவிப்பை வெளியிடுமாறு மேற்கு வங்காளம் மாநில தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆளும்கட்சியின் அராஜகத்துக்கு பயந்து முன்னர் வாட்ஸ்அப் மூலம் சிலர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை தேர்தல் கமிஷன் பரிசீலனைக்கு ஏற்றுகொண்டது. அதுபோல், இ-மெயில் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி மா.கம்யூனிஸ்ட் சார்பில் தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #WestBengalPanchayat polls #email nominations 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com