நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை
Published on

மதுரை:

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி சயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதால்  தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கூறியுள்ளார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைய நடவடிக்கையில் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். 

மேலும் இடைத்தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த உரிய முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com