தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஐகோர்ட் மதுரை கிளை
ஐகோர்ட் மதுரை கிளை
Published on

மதுரை:

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் எனக்கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறநிலைய துறையினரை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும் என இந்துசமய அறநிலைய துறை நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பான வழக்குகள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த‌னர்.

இந்நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com