மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமனாரை தாக்கிய மருமகன் கைது

தேனி அருகே மாமனாரை தாக்கி மிரட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமனாரை தாக்கிய மருமகன் கைது
Published on

தேனி:

கோவை மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சத்யா. இவருக்கும் தேனி அல்லிநகரை சேர்ந்த முத்துக்குமார் (29) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன்- மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 4 மாதமாக சத்யா கணவரை விட்டு பிரிந்து வாழையாத்துப்பட்டியில் உள்ள தனது உறவினர் நடராஜன் வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பற்காக முத்துக்குமார் அங்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த மாமனார் முருகனுக்கும், முத்துக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. அவரால்தான் தனது மனைவி வர மறுக்கிறார் என சந்தேகப்பட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கினார்.

படுகாயம் அடைந்த முருகன் ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com