புரோ கபடி - உபி யோத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது அரியானா

குஜராத்தில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் இறுதிக்கட்டத்தில் உபி யோத்தா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது அரியானா ஸ்டீலர்ஸ் அணி.
பாயிண்ட் எடுக்க முயற்சிக்கும் அரியானா அணியினர்
பாயிண்ட் எடுக்க முயற்சிக்கும் அரியானா அணியினர்
Published on

அகமதாபாத்:

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அகமதாபாத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோத்தா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் புள்ளிகளை சமமாக எடுத்து வந்தன. இறுதியில், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 - 33 என்ற புள்ளிக் கணக்கில் உபி யோத்தா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் அரியானா அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.

பரபரப்பாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்கால் அணி 28-26 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com