அரியானாவில் 4 வயது மாணவி பலாத்காரம்- டிரைவர் தப்பி ஓட்டம்

அரியானாவில் பள்ளிக்கூட பஸ்சில் 4 வயது மாணவியை பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சண்டிகார்:

அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள மடவாலா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.

இந்த சிறுமி இமாசல பிரதேசத்தின் பட்டி டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளிக்கூட பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் சிறுமி பள்ளிக்கூட பஸ்சில் வீடு திரும்பினார்.

வழியில் பஸ்சில் யாரும் இல்லாத நேரத்தில் பஸ்சில் வைத்து டிரைவர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பியதும் நடந்த சம்பவத்தை தனது அத்தையிடம் கூறி அழுதார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் டிரைவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த டிரைவர் தப்பி ஓடி தலை மறைவாகி விட்டார்.

அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக பஞ்ச்குலா உதவி கமி‌ஷனர் நூபுர் பிஸ்னோய் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com