குருகிராம் மாணவன் கொலை வழக்கு: சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு - முதல் மந்திரி கட்டார்

அரியானா மாநிலம் குருகிராமில் கொல்லப்பட்ட மாணவன் வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என மாநில முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
குருகிராம் மாணவன் கொலை வழக்கு: சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு - முதல் மந்திரி கட்டார்
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் பிரதியுமன் சமீபத்தில் பள்ளி வளாகத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தான். தகவலறிந்து வந்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளி பேருந்து நடத்துனர் பாலியல் வன்கொடுமை செய்தபோது, மாணவன் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், பள்ளியில் கொலை செய்யப்பட்ட பிரதியுமன் வீட்டுக்கு மாநில முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் இன்று சென்றார். மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுதொடர்பாக மனோகர்லால் கட்டார் கூறுகையில், பள்ளி மாணவனின் வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com