அரூர் அருகே மொபட் திருடிய வாலிபர் கைது

அரூர் அருகே மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அரூர்:

அரூர் அடுத்த தூரணம்பட்டியை சேர்ந்தவர் சின்னு (வயது 55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தபோது மொபட் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது மொபட்டை திருடி சென்ற நபரை பிடித்து அரூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (30) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com