அரூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

அரூர் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

அரூர்:

அரூர் அருகே உள்ள சுடுகாடு மேடை பகுதியை சேர்ந்தவர் ஜெயரட்சகன் (வயது 24). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்தார். கூத்தாடிபட்டி அருகே சிறிய பால வளைவில் திரும்பியபோது சேலத்தில் இருந்து வேலூருக்கு சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயரட்சகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com