அரூர் திங்கள் சந்தையில் கருவாடு விற்பனை அமோகம்

அரூர் திங்கள் சந்தையில் கருவாடு விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ. 500-வரை விற்பனை செய்யப்படுகிறது.
கருவாடு விற்பனை நடைபெறும் காட்சி.
கருவாடு விற்பனை நடைபெறும் காட்சி.
Published on

அரூர்:

அருர் பகுதியில் சிக்கன்குனியா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே அதிகமானோர் வைரஸ், சிக்கன்குனியா நோய்காளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு, கை,கால், உடம்பு வலி அதிகமாக உள்ளது. இதற்கு கருவாடு சாப்பிட்டால் வலி குறைவதாக மக்கள் நம்புவதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாவே அரூர் சந்தையில் கருவாடு விற்பனை அமோகமாக உள்ளதாக கருவாடு வியாபாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் கூறுகையில், 

கைகால் மூட்டு வலிக்கு கருவாடில் உள்ள கால்சியம் சத்து உதவுவதால் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் கருவாடு வாங்கி செல்கின்றனர். வலி குறைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கருவாடு விற்பனை சூடுபிடித்துள்ளது என கூறினார். சந்தையில் கிலோ கருவாடு ரூ.200 முதல் ரூ. 500-வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com