

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் பல்வேறு குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில், தகுதியான நபர்களுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று நடந்த மருத்துவ முகாமில் தகுதியான 82 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையியை மாவட்ட கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் சிறப்பு மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.