என் குடும்பத்தில் தீவிரவாதியை வைத்திருக்க முடியாது: கேரளப் பெண் ஹதியாவின் தந்தை ஆவேசம்

சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். கும்பலுடன் சேர இருந்த தீவிரவாதியை என் குடும்பத்தில் வைத்துகொள்ள முடியாது என மதம்மாறி திருமணம் செய்த கேரளப் பெண் ஹதியாவின் தந்தை கூறியுள்ளார்.
என் குடும்பத்தில் தீவிரவாதியை வைத்திருக்க முடியாது: கேரளப் பெண் ஹதியாவின் தந்தை ஆவேசம்
Published on

கட்டாய மதமாற்றத்தின் மூலம் திருமணம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளப் பெண் ஹதியா தொடர்ந்து படிக்கவும், சேலம் ஹோமியோபதி கல்லூரி டீனை அவரது பாதுகாவலராக நியமித்தும் சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு ஹதியாவின் தந்தை அசோகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், அங்குள்ள ஆபத்து சிரியாவுக்கு செல்ல ஆசைப்பட்ட ஒரு தீவிரவாதியை எனது குடும்பத்தில் வைத்துகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரும்பத்தகாத சம்பவங்களால் அவளது படிப்பு தடைபட்டதை எண்ணி  முன்னர் நான்  கவலைப்பட்டேன். மேற்கொண்டு படிக்க அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டின் பராமரிப்பில் இருப்பதால் அவளது பாதுகாப்பு பற்றி நான் கவலைப்படவில்லை. என மகளின் காப்பாளராக ஷபின் ஜஹான் உள்பட யாரையும் கோர்ட் நியமிக்கவில்லை. என்னைப்போன்ற நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவளை பார்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com