வேலூரில் எச்.ராஜாவை கண்டித்து போராட்டம்- ராணிப்பேட்டையில் உருவ பொம்மை எரிப்பு

ராணிப்பேட்டை எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூரில் எச்.ராஜாவை கண்டித்து போராட்டம்- ராணிப்பேட்டையில் உருவ பொம்மை எரிப்பு
Published on

வேலூர்:

வேலூரில் எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மக்கான் சிக்னலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இன்று பேரணி சென்று மாவட்ட செயலாளர் சன்னிபோஸ் தலைமை தாங்கினார்.

பேரணியில் மாவட்ட துணை செயலாளர் இன.முதல்வன், அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி என்கிற கோவிந்தன், மாநில துணை செயலாளர் ஷீராவெங்கடேசன், இளங்கோ, விஜயசாரதி, இளையராஜ், ரீகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அமைதியான முறையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பேரணி செல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து பேரணியை தொடர போலீசார் அனுமதி வழங்கினர்.

அண்ணா சாலை வழியாக சென்ற பேரணி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததுடன் நிறைவடைந்தது.

இதேபோல் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே எச்.ராஜாவை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது திடீரென எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com