குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் காவல் நீட்டிப்பு

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் காவலை வருகிற 17-ந்தேதி வரை நீட்டித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். #GutkhaScam
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் காவல் நீட்டிப்பு
Published on

சென்னை:

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ், சினிவாசராவ், உமாசங்கர், நவநீதகிருஷ்ண பாண்டியன், செந்தில் முருகன், சிவகுமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களது நீதிமன்ற காவலை நீட்டிப்பதற்காக, அவர்கள் அனைவரும் இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். #GutkhaScam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com