குட்கா ஊழல் - லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியிடம் சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பில் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சிபிஐ அதிகாரிகள் திடீரென விசாரணை நடத்தியுள்ளனர்.
சிபிஐ
சிபிஐ
Published on

சென்னை:

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரே முதலில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன் பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், சென்னையில் முகாமிட்டு அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமின்றி, டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர்.

குட்கா ஊழலின் போது சென்னையில் பணியாற்றி வெளி மாவட்டங்களுக்கு மாறுதலாகி சென்ற போலீஸ் அதிகாரிகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இருப்பினும் குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லை. இதனால் குட்கா விவகாரம் விசாரணை விரைவிலேயே நின்று விட்டது.

இந்த நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பில் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென விசாரணை நடத்தியுள்ளனர். இப்போது அந்த அதிகாரி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.

கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அந்த அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குட்கா ஊழல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை பற்றி தகவல்கள் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com