குருகிராம்: ஆசிரியர் அடித்ததில் 10ம் வகுப்பு மாணவர் தலையில் பலத்த காயம்

குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் படுகாயமடைந்த 10 ம் வகுப்பு மாணவர் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குருகிராம்: ஆசிரியர் அடித்ததில் 10ம் வகுப்பு மாணவர் தலையில் பலத்த காயம்
Published on

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் ராகுல் சர்மா என்ற மாணவன் 10-ம் வகுப்பு பயின்று வருகிறான். இன்று வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளான். திடீரென மாணவனின் பெற்றோருக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்துள்ளது.


இதையடுத்து, அவர்கள் பக்தாபூரில் உள்ள எக்தா மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது மாணவனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளி ஆசிரியர் அடித்ததால் மாணவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது தெரியவந்தது.

ராகுலின் பெற்றோர் ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com