தனியார் பள்ளி கழிவறையில் 2-ம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்

அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள தனியார் பள்ளியின் கழிவறையில் இன்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 7வயது மாணவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி கழிவறையில் 2-ம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரில் ரியான் இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிராதுமன்(வயது 7) என்ற மாணவன் 2-ம் வகுப்பில் பயின்று வந்தான்.

இந்நிலையில், இன்று காலை 8:15 மணியளவில் பிராதுமன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு சரியாக 8:45 மணிக்கு மாணவன் இறந்து விட்டதாக அவனது தந்தைக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் அளித்துள்ளனர்.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பள்ளி கழிவறையில் பிணமாக கிடந்த பிராதுமன் உடலுக்கு அருகில் அவனை கொல்வதற்கு பயன்படுத்திய கத்தி கிடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்துவந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com