

சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதிக்கான ஆம் ஆத்மி வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மேஜர் ஜெனரல் சுரேஷ் கஜூரியா போட்டியிடுவார் என அக்கட்சியின் டெல்லி தலைமை இன்று அறிவித்துள்ளது.
குருதாஸ்பூர் பகுதி ஆம் ஆத்மி கிளை மற்றும் அப்பகுதியில் உள்ள தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அந்த தொகுதிக்குட்பட்ட பத்தான்கோட் பகுதியில் வசிப்பவரும், இந்திய ராணுவத்தில் நாட்டுக்காக சேவையாற்றியவருமான மேஜர் ஜெனரல் சுரேஷ் கஜூரியாவை இந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிப்பதில் பெருமிதம் கொள்வதாக ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.