

நைஜீரியாவில் கும்பல்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக ஜம்பாரா, கதுனா மாநிலங்களில் துப்பாக்கிகளுடன் வந்து தாக்குதல் நடத்துவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஜம்பாராவில் மட்டும் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜம்பாரா மாநிலம் பாரு மாவட்டம் மகாமி கிராமத்தில் சனிக்கிழமை திடீரென நுழைந்த மர்ம நபர்கள், அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.