அமெரிக்கா: வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு - பெண் பலி

அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா: வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு - பெண் பலி
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தில் உள்ள முக்கிய நகரான சின்னாசிட்டிக்கு வெளியே இருக்கும் கொலேரியன் நகரமைப்பில் உள்ள ஒரு வீட்டில் கர்பிணி பெண்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. அப்போது, முகமூடி அணிந்த இரு மர்மநபர்கள் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரும் பின்னர் காரில் தப்பிச் சென்றுவிட்டனர். மர்மநபர்களின் தாக்குதலில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு கர்பிணி பெண்ணும் அடங்குவார். மேலும், மர்மநபர்களுடன் ஏற்பட்ட கைக்கலப்பில் மற்றொரு கர்பிணி பெண்ணுக்கு கரு கலைந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com