கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மகாலிங்க நகரில் வசித்து வருபவர் அல்லா பகாஷ்(வயது56). பட்டாசு வியாபாரியான இவர், மாந்திரீகம் தொழிலும் செய்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதம், 26-ந்தேதி இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் ஓடு போட்ட தனியறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 50 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை அள்ளிச்சென்றனர். . இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக எளாவூர் அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com