மதுக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை - 3-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து 3-வது முறையாக கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை
கொள்ளை
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு, வளைக்குண்டு என்ற இடத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடையை ஊழியர்கள் மூடிச் சென்றனர்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் வெளிப்புறம் இருந்த கண்காணிப்பு கேமிராவை முதலில் மேல் நோக்கி துப்பினர். பின்னர் உருட்டு கட்டையால் மின் மீட்டர் இணைப்பை அடித்து உடைத்து கடையின் மின் இணைப்பை துண்டித்தனர்.

இதைத் தொடர்ந்து மதுக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் உயர்ரக மதுப்பாட்டில்கள் மற்றும் கடை மூடுவதற்கு முன்பு கடைசியாக கல்லாவில் இருந்த ரொக்கப்பணம், சில்லறை காசுகளையும் அள்ளி தப்பி சென்றுவிட்டனர்.

முதலில் விற்பனையான ரொக்கப்பணம் பாதுகாப்பாக வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டதால் அது தப்பியது. சுமார் ரூ. 5 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்கும் என்று தெரிகிறது.

இந்த மதுக்கடையில் கடந்த 6 மாதங்களில் தற்போது 3-வது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com