கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 40). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் தனது மனைவி சுகுணா (35) வுடன் மீஞ்சூரை அடுத்த நாப்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு எளாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கவரைப்பேட்டை மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் வரும்போது, பாலத்தின் பக்கவாட்டு சுவர், சுகுணாவின் கால்களில் பட்டு அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.

அப்போது அதே திசையில் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் சுகுணா சிக்கி கொண்டார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com