கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயிலில் ரேசன் அரிசி கடத்தல்

கும்மிடிப்பூண்டி மின்சார ரெயிலில் 90 சிறிய மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 3500 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயிலில் ரேசன் அரிசி கடத்தல்
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் வழியாக செல்லும் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்று காலை இன்ஸ்பெக்டர் அங்கட்குமார் தலைமையில் ரெயில்வே போலீசார் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் நோக்கிச்சென்ற மின்சார ரெயில் பெட்டிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பயணிகளின் இருக்கைகளுக்கு கீழ் இருந்து 90 சிறிய மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 3500 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com