கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கோவிந்தராஜபுரம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் அருண்குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 20-ந் தேதி இரவு அருண்குமாரை அவரது தந்தை ஜார்ஜ் வந்து பார்த்தார். அதன்பிறகு அருண்குமார் வீடு பூட்டியே கிடந்தது.

நேற்று அருண்குமார் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அருண்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தற்கொலை செய்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. இதனால் அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஏக்கத்தினால் அருண்குமார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com