கூடுவாஞ்சேரி அருகே தொழிலாளி தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on: 

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 42). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். அடிக்கடி மது குடித்து விட்டு வரும் அவர் தனது மனைவி சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் சுமதி வேலைக்கு சென்று விட்டார்.

பாலு பாண்டூர் சமுதாயக்கூடம் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் சுமதிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமதி தனது கணவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com