குடியாத்தம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

குடியாத்தம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே உள்ள ஒலக்காசி ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கனிமொழி (வயது37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மதிவாணன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தினமும் கனிமொழியிடம் தகராறு செய்துவந்தார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கனிமொழி இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com