குடியாத்தம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
குடியாத்தம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி குப்பத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 52). விவசாயி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஜெகநாதன் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தம்பதியினர் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு நிலத்தில் உள்ள கோழிபண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.4 லட்சம், 7 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இன்று காலை ஜெகநாதன், ஜோதி வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெகநாதன் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com