கூடலூர் அருகே பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கூடலூர் அருகே பைக்கில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கூடலூர் அருகே பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
Published on

தேனி:

கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டி பஞ்சாயத்து ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி சிவனேஸ்வரி (வயது 22). அரசமர தெருவைச் சேர்ந்தவர் விவேக் (வயது 18) இவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார். இதனை சிவனேஸ்வரி தெருவுக்குள் இவ்வளவு வேகமாக வரக்கூடாது என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவேக் அரிவாளை எடுத்து சிவனேஸ்வரியை வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கூடலூர் வடக்கு போலீசார் விவேக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போல் விவேக்கின் தாத்தா அளித்த புகாரின் பேரில் சிவனேஸ்வரி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com