கூடலூர் அருகே தோட்டத்தில் மது அருந்துவதை தட்டிகேட்டவருக்கு மிரட்டல்

கூடலூர் அருகே தோட்டத்தில் மது அருந்துவதை தட்டி கேட்ட விவசாயி தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் அருகே தோட்டத்தில் மது அருந்துவதை தட்டிகேட்டவருக்கு மிரட்டல்
Published on

தேனி:

கேரள மாநிலம் கோட்டயம் வீராத்துபேட்டை பகுதியை சேர்ந்தவர் இர்சாது (வயது35). இவர் கூடலூர் அருகில் உள்ள கழுதைமேடு குளம் பகுதியில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வாழை மற்றும் தென்னை மரங்கள் வளர்த்து வந்தார்.

இந்த தோட்டத்தில் கூடலூரை சேர்ந்த செல்வம், கணேசன், அருண் பாண்டியன் (27) ஆகிய 3 பேரும் அடிக்கடி வந்து மது குடித்து சென்றுள்ளனர்.

மேலும் மது பாட்டில்களையும் அதே இடத்தில் விட்டு சென்றனர். இதனை இர்சாது அடிக்கடி கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று மது குடிக்க வந்தவர்களை இர்சாது கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இர்சாதை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் இதை தட்டிகேட்ட ஆல்பி (26) என்பவரையும் கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com