

நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கூடலூரில் உள்ள காலாம்புழா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காலாம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புறமணவயல் கிராமம் முற்றிலுமாக நீரில் மூழ்கின. வெள்ளத்தில் தவித்த சுமார் 30 பேரை மாவட்ட வருவாய்த்துறையினர் மீட்டனர்.