49 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு - கைவினைப்பொருட்கள் மீதான வரி நீக்கம்

நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் இன்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 49 பொருட்கள் மீதான வரியை குறைத்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. #GSTCouncilMeet
49 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு - கைவினைப்பொருட்கள் மீதான வரி நீக்கம்
Published on

புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் 25-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில், கலந்து கொண்ட மாநில நிதி மந்திரிகள் பல்வேறு பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரகாண்ட் நிதியமைச்சர் கூறியதாவது:-

செய்தியாளர்களிடம் பேசுகையில், 29 கைவினைப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டு உள்ளது, 49 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது என்றார். பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களில் டிக்கெட் கட்டண வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவிதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் வரிவிதிப்பு குறைவு முடிவுகள் ஜனவரி 25-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கையில், இன்று இது தொடர்பாக ஆலோசிக்கப்படவில்லை, அடுத்த கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com