ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல்- மேலும் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். #JammuBlast #GrenadeAttack
ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல்- மேலும் ஒருவர் உயிரிழப்பு
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பஸ்சில் திடீரென குண்டு வெடித்துள்ளது. பேருந்தின் அடியில் வீசப்பட்ட கையெறி குண்டு வெடித்ததில் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.  #JammuBlast #GrenadeAttack

X

Maalai Malar
www.maalaimalar.com