

கரூர்:
கரூருக்கு பழ வகைகள் திருச்சி, கம்பம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரத்து காணப்படுகிறது. பெரிய வியாபாரிகளிடம் இருந்து கடை வியாபாரிகள் பழங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். சில கடை வியாபாரிகள் நேரடியாக வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்து விற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கம்பம், தேனி பகுதிகளில் இருந்து கரூருக்கு பன்னீர் திராட்சை பழம் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையான பன்னீர் திராட்சை, கடைகளில் தற்போது ரூ.20 குறைந்து ரூ.80-க்கு விற்பனையாகிறது.
இதேபோல் மராட்டிய மாநிலத்தில் இருந்து பச்சை திராட்சை பழம், சீட்லஸ் திராட்சை பழம் வரத்தும் அதிகரித்துள்ளது. அதே போல் கடந்த வாரம் ரூ.200-க்கு விற்பனையான சீட்லஸ் திராட்சை பழம் தற்போது, ரூ.120-க்கு விற்பனையாகிறது. இதேபோல் பச்சை திராட்சை பழம் ரூ.160-க்கு விற்றது தற்போது, ரூ.120க்கு விற்பனையாகிறது.
கரூரில் ஒரு பழக்கடையில் விற்பனையான பழங்களில் சிலவற்றின் விலை கிலோ கணக்கில் வருமாறு:-
ஆப்பிள் ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.180-க்கும், மாதுளை ரூ.90-க்கும், சாத்துக்குடி ரூ.70-க்கும், ஆரஞ்சு ரூ.80-க்கும், சப்போட்டா ரூ.50-க்கும், அன்னாசி ரூ.50-க்கும், பப்பாளி ரூ.35-க்கும் விற்றது. தற்போது பனிக்காலமாக இருப்பதால் பழ வியாபாரம் சற்று குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். #tamilnews