நல்லெண்ணெய் என்று நினைத்து திராவகத்தை குடித்த மூதாட்டி உயிரிழப்பு

திருப்பூரில் நல்லெண்ணெய் என்று நினைத்து திராவகத்தை குடித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கனகிரி பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பாப்பா (வயது 65) . சின்ன பாப்பாவுக்கு வயிற்று வலி ஏற்படும் போது வீட்டில் உள்ள நல்லெண்ணெய் குடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சின்ன பாப்பாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது வீட்டில் இருந்த பாட்டிலில் நல்லெண்ணெய் என்று திராவகத்தை (ஆசிட்) தவறுதலாக குடித்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டவரை அவருடைய வீட்டினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சின்ன பாப்பா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com