பேத்தி உடல் நிலை பாதிப்பு: உருக்கமாக கடிதம் எழுதி வைத்து பாட்டி தற்கொலை

பேத்தி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மன வேதனையடைந்த பாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை கும்பம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி லட்சுமி (வயது 57). இவரது பேத்திக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தபோதும் நோய் குணமாகவில்லை.

இதனால் மனம் வெறுத்த லட்சுமி தனது வீட்டு அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். லட்சுமி தான் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதத்தை அவர்கள் கைப்பற்றினர். அதில் தனது பேத்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனது பேத்திக்கு முன்பாக நான் இறந்து விட வேண்டும் என முடிவு எடுத்து தற்கொலை செய்ய வேண்டும் என நினைத்தேன் என எழுதியிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com