கோவையில் விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை

கோவையில் விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை கணபதி அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் திவாகர் (வயது 25). எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் வடகோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

திவாகர் கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ளவர்களிம் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்தார். இது குறித்து அவரது பெற்றோர் கேட்டதற்கு பதில் எதும் தெரிவிக்காமல் இருந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த திவாகரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திவாகர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com