பள்ளி மாணவியை கடத்திய பட்டதாரி வாலிபர் கைது

காரிமங்கலத்தில் 11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி சென்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடுகளை மேய்க்க சென்ற மாணவியை காரில் வந்த நபர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதில் கும்பாரஅள்ளி பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபரான சக்திவேல் (வயது 22) என்பவர் தனது மகளை கடத்தி சென்றதாக புகார் செய்தனர். 

இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தேடி வந்தனர். இந்த வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவியை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com