திருவோணம் அருகே தூக்கில் பட்டதாரி இளம்பெண் பிணம்

திருவோணம் அருகே தூக்கில் பட்டதாரி இளம்பெண் பிணமாக கிடந்தார். அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்று உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை தீத்தான் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் அஜித்குமார் (வயது24). டிரைவர். இவர் நெய்வேலி வடபாதி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகள் திவ்யா (22) பி.ஏ.பட்டதாரி என்பவரை காதலித்து கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு திவ்யா, அஜித்குமாரின் வீட்டிற்கு அருகில் உள்ள ஆட்டுக்கொட்டகையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்த திவ்யாவின் உறவினர்கள் வெட்டுவாக்கோட்டையில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு வந்தனர். அப்போது அஜித்குமார், அவரது தாய் பவுனம்பாள்(47) உள்ளிட்ட சிலரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திவ்யாவிற்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தாரா? என்பது குறித்து தஞ்சாவூர் உதவி கலெக்டர் வேலுமணி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com